சீமான் ஒரு என்டர்டெய்னர் அவரை மக்கள் ரசிக்கின்றனர் நானும் ரசிக்கின்றேன் ஆனால் அவரால் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் பெற முடியாது பாஜக மாநில பொது செயலாளர் சீனிவாசன் பேட்டி
அரசியலில் சிவாஜி, விஜயகாந்த், கமல் ஆகியோருக்கு என்ன நடந்ததோ அதுதான் விஜய்க்கும் நடக்கும், சினிமாவில் வேண்டுமானால் அவர் ஹீரோவாக இருக்கலாம் ஆனால் அரசியலில் இல்லை என பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேட்டி தேனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் அறிமுக விழா தேனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன் பிரசாந்த் கிஷோர் ஒரு கமிஷன் ஏஜென்சி எங்கே அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அங்கே ஆலோசனை கொடுத்து வருகிறார் தற்போது விஜய்க்கு ஆலோசனை கொடுக்கிறார் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஒரு வணிக ரீதியிலான சந்திப்பு எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து யார் வந்தாலும் வெற்றி பெற முடியாது அது விஜய்க்கும் பொருந்தும், அரசியலில் சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமலஹாசனுக்கு என்ன நடந்ததோ அதேதான் விஜய்க்கும் நடக்கும் சினிமாவில் வேண்டுமானால் விஜய் ஹீரோவாக இருக்கலாம் அரசியலில் இல்லை தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து பாஜக பார்த்து கொண்டிருக்காது ஈரோடு இடைத்தேர்தலில் வேறு யாரும் போட்டியிடாததால் நாம் தமிழர் 23 ஆயிரம் வாக்குகள் பெற்றனர் சீமான் ஒரு என்டர்டெய்னர் அவரை மக்கள் ரசிக்கின்றனர் ஆனால் நம்பவில்லை மக்களின் நம்பிக்கையை அவர் ஒரு நாளும் பெற முடியாது நானும் சீமானை ரசிப்பேன் என தெரிவித்தார்
Next Story




