ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா.

ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா.
X
புதுப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு.
புதுப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி கோ பூஜை விக்னேஸ்வர பூஜை நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு யாக சாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடு செய்து கலசங்கள் விமான கோபுரத்திற்கு சிவாச்சாரர்கள் எடுத்து செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இதில் மத்திய அரசு கல்வி ஊக்கத்தொகை 2000 கோடியினை விடுவிக்கவில்லை என குற்றம் சாட்டுவதாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு தமிழகத்தை பொறுத்தவரை தவறான ஒரு எண்ணம் மத்திய அரசு என்னமோ தமிழகத்தை புறக்கணிப்பது போல் கூறி வருகிறார்கள்.இந்தியாவிலே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது குஜராத் மாநிலத்துக்கு அல்ல தமிழ்நாட்டிற்கு அதேபோன்று அதேபோல் இருக்கிற அனைத்து சிட்டிகளும் ஸ்மார்ட் சிட்டிகளாக உள்ள மாநிலமும் தமிழ்நாடு உள்ளது.செய்வதை கூறுவதற்கு மனம் வேண்டும் செய்யாததை கேட்டு பெற வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
Next Story