வாணியம்பாடி அருகே காளை விடும் விழாவில் ஓடிய மாடு ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே  காளை விடும் விழாவில் ஓடிய மாடு ரயிலில் அடிபட்டு  உயிரிழப்பு!
X
வாணியம்பாடி அருகே காளை விடும் விழாவில் ஓடிய மாடு ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காளை விடும் விழாவில் ஓடிய மாடு ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு! திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் பகுதியில் காளை விடும் விழா விமர்சையாக நடைபெற்று வருகின்றது இதில் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி,திருப்பத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் அதிகமான மாடுகள் கலந்து கொண்டன. அப்போது களத்தில் ஓடிய மாடு ஒன்று அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதியதில் மாடு உடல் சிதறி பரிதாபமாக அதே இடத்தில் இறந்தது. தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த காளை மாட்டின் உடலை மீட்டனர்.
Next Story