சென்னைப் புறநகர் பகுதியில் பட்டாகத்திகளுடன் நான்கு பேர் கைது

சென்னை புற நகர்ப் பகுதியான புழல் கதிர்வேடு மேம்பாலம் அருகே பட்டாகத்திகளுடன் நான்கு பேர் கைது பட்டா கத்தி மோட்டார் சைக்கிள் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் புழல் கதிர்வேடு மதுரவாயில் செல்லும் மேம்பாலத்தில் புழல் செக்டர் போலீசார் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் நின்று கொண்டிருந்து பேசிக் கொண்டிருந்தனர் . அவர்களை போலீசார் அணுகி விசாரிக்கும் போது முன்னுக்கு பின் முரணாக பேசியதில் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் , அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் ( வயது 29) கொடுங்கையூர் மெக்கானிக் ரஞ்சித் குமார் (வயது 25) அன்பரசன் (வயது 18 ) வில்லிவாக்கம் பழனி (வயது 65) ஆகியோர் என தெரியவந்தது . பின்னர் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ஒரு பட்டாகத்தியும் குவாட்டர் மது பாட்டில்களும் சிக்கியது. பின்னர் இவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் , துளசி நகரில் வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் இருநபர்கள் வாடகைக்கு இருப்பதாகவும் அவர்கள் வாடகை பணம் தராமலும் வீட்டை காலி செய்யாமலும் இரண்டு வருட காலம் கடத்தி வந்ததாகவும் , இதுசம்பந்தமாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து , தொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், இதற்கிடையில் வீட்டை காலி செய்ய அடியாட்களை ஏவி குடியிருப்பவர்களை மிரட்டுவதற்காக பட்டா கத்தியுடன் சென்றதாக தெரியவந்தது. பின்னர் இவர்கள் நான்கு பேரின் மீதும் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம் இரண்டு ஒரு பட்டாகத்தியையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். செக்டர் போலீசாரின் துரித நடவடிக்கையால் குற்றம் நிகழும்முன் நான்கு பேரையும் தைரியமாக பிடித்து அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை உயர் காவல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Next Story