தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் உட்கட்சி பிரச்சனை

X

எரியோடு பேரூர் ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த தலைவருக்கும் திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவருக்கும் உட்கட்சி பிரச்சனை தலைவர் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம்
வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள பண்ணை பட்டியைச் சேர்ந்த திமுக மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருப்பவர் பண்ணை கார்த்திகேயன். இவரது மனைவி முத்துலட்சுமி எரியோடு பேரூராட்சி தலைவராக உள்ளார். முன்னால் திமுக மாவட்ட துணைச் செயலாளராக இருந்தவரும் தற்பொழுதைய எரியோடு பேரூராட்சி துணைத்தலைவராக இருப்பவர் ஜீவா. பண்ணை கார்த்திகேயனுக்கும் ஜீவாவுக்கும் கட்சி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜீவா என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் நான் சுத்தமாக புறக்கணிக்கப்படுகிறேன் என்றும் இதற்கு காரணம் நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன் என்று கூறி பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராஹிர் ஜீவாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
Next Story