நீர் வரத்தின்றி நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

X

நீர்வரத்து ஓடை அடைபட்டதால் நீர் வரத்தின்றி நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு விவசாயிகள் கவலை
குஜிலியம்பாறை தாலுகா குளத்துப்பட்டி ஊராட்சி பகுதி வழியாக 30 அடி அகலம் கொண்ட நீர்வரத்து ஓடையின் மூலம் தண்ணீர் வந்து 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாணிக்கரை கண்மாயில் நிறையும். இதன் மூலம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனையில்லாமல் காலங்காலமாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நீர் வரத்து ஓடை புதர் மண்டி நீர் வர வழி இல்லாமல் இருப்பதால் குலத்திற்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால் வாணிக்கரை சுற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அரசு நிர்வாகம் தலையிட்டு நீர்வரத்து ஓடையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story