இந்தியா-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையம் ஆய்வு

X

ரெட்டியார்சத்திரத்தில், இந்தியா-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில், இந்தியா-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இஸ்ரேல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட சூழலிலும் திறந்தவெளியிலும் காய்கறி சாகுபடி செயல்விளக்க திடல்கள் அமைப்பது இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், புது தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் செல்லுதல், தரமான குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கி காய்கறி பயிர்களின் உற்பத்திதிறனை மேம்படுத்துதல், புது தொழில்நுட்பங்கள் தொடர்பாக பயிற்சி அளித்தல் போன்றவை இந்த மையத்தின் நோக்கமாகும். இதுவரை இம்மையத்திலிருந்து சுமார் 49,000 விவசாயிகள் உட்பட சுமார் 67,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மையத்தில் ஒரு தோட்டக்கலை பட்டயபடிப்பு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவார்களுடன் செயல்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை) பெபின்இளம்பரிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்வண்ணன், மாரியப்பன், உதவிப்பொறியாளர்கள் ராஜேஷ்குமார், மகேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story