எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு கருத்தரங்கம்

X

திண்டுக்கல் ஈதுகா மஹாலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது
திண்டுக்கல் ஈதுகா மஹாலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் வக்பு உரிமை மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தௌஃபிக் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் மாவட்ட நகர ஜமாத்துல் உலமா சபை, ஜமாத் தலைவர், செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் அப்துல்லா ஹஸ்ஸான், ஜமாத்துல் உலமா சபை திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் முகமது இலியாஸ் உலவி, மதுரை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அபுதாஹிர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி தலைவர் முகமது நசீர் நன்றி உரை வழங்கினார். செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவல். மேலும் இது குறித்து மாநிலச் செயலாளர் அப்துல் ஹஸ்ஸான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய 2024 வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி மக்கள் மன்றத்திலே இந்த சட்டம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்ற அடிப்படையில் மிகப்பெரிய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கின்றோம். அந்த அடிப்படையிலே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த அடிப்படையிலே இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் தனியார் மஹாலில் இந்த வக்பு திருத்த மசோதாவினுடைய பாதிப்புகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த சட்டமானது திட்டமிட்டு இஸ்லாமிய மக்களை இந்த மண்ணிலே அகதியாக மாற்றுவதற்கு உண்டான ஒரு செயல் திட்டம் என்பதை பற்றி ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கின்றது. அதேபோன்று இந்த சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருப்பது என்பது இந்த மண்ணிலே இருக்க கூடிய வக்பு சொத்துக்கள் அனைத்தையும் சட்டரீதியாக இஸ்லாமிய மக்களிடமிருந்து பறித்து விட வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்தில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையில் இதை அரசு சட்டமாக்கி வக்பு சொத்தை அபகரிக்க தான் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. எனவே இந்த வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த விதத்திலும் நாம் அனுமதிக்க மாட்டோம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்களுடைய போராட்டங்களை எடுத்து வைப்பதற்கு தயாராக இருக்கிறோம் மத்திய அரசு தொடர்ச்சியாக இந்திய மண்ணில் வசிக்கக்கூடிய மக்கள் விரும்பாத சட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அது விவசாயிகளுடைய சட்டங்களாக இருந்தாலும் சரி, தொழிலாளர்களுடைய சட்டங்களாக இருந்தாலும் சரி அதை போன்று எண்ணற்ற சட்டங்களை இந்த மண்ணிலே மக்கள் விரும்பாத சட்டங்களை கருப்பு சட்டங்களாக திணிப்பு சட்டங்களாக கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் எதிர்த்து மக்கள் தங்களுடைய போராட்டத்தின் மூலமாக வெற்றியைப் பெற்றுக் கொண்டார்களோ, அப்படி இஸ்லாமிய சமூகத்திற்கு இருக்கக்கூடிய இந்த வக்பு திருத்த போராட்டங்களை நடத்துவதற்கு எஸ்டிபிஐ கட்சி திட்டமிட்டு இருக்கிறது என்றார்.
Next Story