வீட்டுமனைப் பட்டா கோரி பெண்கள் மனு

வீட்டுமனைப் பட்டா கோரி பெண்கள் மனு
X
திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா கோரி பெண்கள் மனு
திண்டுக்கல்- சிலுவத்தூா் சாலையிலுள்ள ராஜாக்காப்பட்டி குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோா், வீட்டுமனை வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் பல முறை மனு அளித்தோம். வாடைகை வீடுகளில் வசிக்கும் எங்களுக்கு இதுவரை வீட்டுமனைப் பட்டா கிடைக்கவில்லை. எங்கள் பெயா்களில் சொந்தமாக நிலம், வீடு என எந்தவித சொத்துக்களும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியா், எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
Next Story