கலந்துரையாடல் கூட்டத்தில் மனுக்கள் பெற்ற அமைச்சர்

கலந்துரையாடல் கூட்டத்தில் மனுக்கள் பெற்ற அமைச்சர்
செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 418 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா(தாம்பரம்), வரலட்சுமி மதுசூதனன்(செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 418 கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலும்ஸ இம்மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் கூட்டத்தில்ஆய்வு செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். இக்கூட்டத்தில், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற மேலக்கோட்டையூா் விளைாட்டு விடுதி மாணவி ஆா்.ஸ்ருதிகா, ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற எம்.முனியசாமி மற்றும் புது தில்லியில் நடைபெற்ற சா்வதேச கிக் பாக்ஸிங் -2025-இல் தங்கம் வென்ற கூடுவாஞ்சேரியை மாணவா்கள் அஷ்வின், ஜெகநாத், பரத் விஷ்ணு, அகில இந்திய சைக்கிளிங் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் மோனிஷையும் அமைச்சா் பாராட்டிகௌரவித்தாா்.
Next Story