தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்
X
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5,000 காலியிடங்களுக்கு தேவைக்குரிய நபா்களை, தோ்வு செய்ய உள்ளாா்கள். முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்களை தோ்ந்தெடுக்கும் வேலையளிப்பவா்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 8, 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுனா், ஆய்வக உதவியாளா்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.வயது வரம்பு 18 முதல் 45வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், அதன் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.02.2025 வெள்ளிக் கிழமை காலை 09.00 முதல் பிற்பகல் 03.00 மணி வரை செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வர வேண்டும்.. இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது . மேலும், விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 63834 60933 / 94868 70577 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
Next Story