நல்லம்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

நல்லம்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சுற்று வட்டார பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அலுவலர்களிடம் அளித்து வருகின்றனர்
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி மற்றும் இண்டூர், நல்லம்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் இன்று பிப்ரவரி 19 நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது இந்த முகாமில் வருவாய் துறை, ஊராட்சி மற்றும் நிர்வாக துறை, சமூக நலத்துறை,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட தமிழக அரசின் 15 துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர் இந்த முகாமில் நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.
Next Story