மும்மொழி திட்டத்தை ஆதரித்து திமுகவுக்கு எதிராக பிஜேபி போஸ்டர் யுத்தம்ற

மும்மொழி திட்டத்தை ஆதரித்து திமுகவுக்கு எதிராக பிஜேபி போஸ்டர் யுத்தம்ற
X
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்மொழி கொள்கைக்கு ஆதரவாக நேற்று இரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இன்னும் எத்தனை காலத்திற்கு மொழி உணர்வை தூண்டி அரசியல் செய்வீர்கள்? நீங்கள் உங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி திட்டம், உங்கள் குடும்பத்து மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மும்மொழி திட்டம், அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழி திட்டம் ஆனால் எங்கள் ஏழை மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மும்மொழி திட்டம் மறுப்பது ஏன்? ஊருக்கு தான் உபதேசமா? என கேள்வி எழுப்பி போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இரவு ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களை இன்று அதிகாலையிலேயே போலீசார் கிழித்து அகற்றினர்.
Next Story