முத்தமிழ் மன்ற திருவிழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

முத்தமிழ் மன்ற திருவிழாவில்  அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
X
முத்தமிழ் மன்ற திருவிழாவில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 32ஆம் ஆண்டு முத்தமிழ் மன்றம் பல் சுவை இலக்கிய பைந்தமிழ் திருவிழா மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை 400 ஆண்டுகள் முன் தோன்றிய இந்தி மொழி அழிக்க நினைப்பது சரியா என கேள்வி எழுப்பினார்? அருணகிரிநாதர் பாடலை தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் சினிமா பாடலாக மாற்றுகின்றனர் முத்தமிழ் மன்ற திருவிழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இரண்டு நாட்கள் இன்று மற்றும் நாளை வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சார்பில் பல்சுவை இலக்கிய பைந்தமிழ் திருவிழா நடைபெறுகிறது இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதன் பின்னர் "வனசிறையும் "மனச்சிறையும்" என்ற தலைப்பில் மருத்துவர் சுதாசேஷன் முன்னாள் எம்ஜிஆர் மருத்துவம் பல்கலைக்கழக துணை சிறப்புரையாற்றினார் அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசுகையில் தமிழுக்கு ஆபத்து வரும் பொழுதெல்லாம் மக்களாகிய நீங்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டும் வால்மிகு ராமாயணம் காட்டிலும் கம்பராமாயணம் சிறந்தது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை 400 ஆண்டுகள் முன் தோன்றிய இந்தி மொழி அழிக்க நினைப்பது சரியா என கேள்வி எழுப்பினார்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் பொழுது தமிழை மேற்கோள் காட்டி பேசும்பொழுது தமிழ் மொழியை ஆட்சிமொழியாக ஆக்க ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள் என நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி எழுப்பினார் ? சிங்கப்பூர், மொரிஷியஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்தியன் என்று சொன்னால் தமிழராக தான் இருப்பான் இலங்கையில் 2வது மொழியாக தமிழ் இருக்கிறது ஆனால் நம்மூரில் வாங்குகின்ற பாஸ்போர்ட்டில் தமிழ் இருக்கிறதா? அண்டை மாநிலத்தில் வாங்குகின்ற பாஸ்போர்ட்டில் தமிழ் இருக்கிறது ஆனால் இந்தியாவில் பெருமையாக பேசிக் கொண்ட தமிழில் பல மாநிலத்திற்கு வழிகாட்டியாக இருக்கிற தமிழ்நாடு மலேசியாவில் நிர்வாகத்தின் மொழியாக தமிழ் மொழி தான் இருக்கிறது சீனா நாடுகளில் தமிழை மட்டும்தான் வானத்தில் போகின்ற விமானத்தில் தமிழில் பேசப்படுகிறது ஜெர்மன் நாட்டின் பேருந்துகளில் பெயர் பலகை தமிழில் உள்ளது இந்தியாவினுடைய மரியாதையாக சொல்ல வேண்டுமென்றால் மாண்புமிகு மாண்புமிகு பிரதமர் ஐநாவிற்கு சென்றால் திருக்குறளை பேசுகிறார் தமிழ்நாட்டிற்கு வந்தால் வணக்கம் நன்றி என்று தமிழில் பேசுகிறார். இந்தியாவினுடைய நிதிநிலை வாசிக்கப்படுகிறது அந்த நிதி நிலையை வாசிக்கிற பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு சகோதரி நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் மண்ணென்று பெருமை பேசுகிறார் நிதிநிலை அறிக்கை வாசிக்கிற பொழுது திருக்குறளை உதாரணம் சொல்லுகிறார். கிரேக்க,இலத்தீன்,அரேபியன், பால சீகன், சமஸ்கிருத, சீன இப்ரோ ஆகிய 7 மொழி செம்மொழி அந்தஸ்து இருந்தது ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும் செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர் எனவும் தமிழ் மொழிக்கு மட்டும்தான் இலக்கியம் உள்ளது. அருணகிரிநாதர் பாடலை தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் சினிமா பாடலாக மாற்றுகின்றனர் ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே' என்பது திருப்புகழ் பாடலில் தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலாக மாற்றி இசையமைத்துள்ளனர் என்றும் பிரதமர் நினைத்தால் இந்தியாவிலேயே எதுவேனாலும் நடக்கும் அப்படிப்பட்ட அதிகாரப்படைத்த பிரதம அமைச்சர் அப்படி பெருமைக்குரிய நாலாயிரம் ஆண்டு புகழ் பெற்ற நம் தமிழை ஏன் இந்தியா ஆட்சி மொழியாக அரசு அலுவலக மொழியாக ஆக்குவதற்கு உங்கள் மன சங்கடம் எங்கே செல்கிறது என பேசினார்.
Next Story