ஜெ. சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ

மதுரையில் இன்று ஜெ. பிறந்த நாளை முன்னிட்டு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ ஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் ஜெ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
மதுரை கேகே நகர் ஆர்ச் அருகே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு இன்று (பிப் .24) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் தலைமையில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ,வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கோர்ட் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜெயலலிதா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story