செயல்படுத்திய திட்ட அறிக்கையை மக்களிடம் வழங்கிய அமைச்சர்

மதுரையில் அமைச்சர். பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதியில் செயல்படுத்திய திட்டம் குறித்த அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரும் மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் , கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுதி வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு தமது தொகுதியில் நிறைவேற்றிய திட்டப்பணிகள் குறித்த செயல்பாட்டு அறிக்கையை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்து வருகிறார். அவ்வகையில் , தமது 17 வது செயல்பாட்டு அறிக்கையினை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அமெரிக்க மிஷன் சர்ச் தெரு பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கினார்.
Next Story