கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசை அமைச்சர் கயல்விழி வழங்கினார்

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசை அமைச்சர் கயல்விழி வழங்கினார்
X
தாராபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசை அமைச்சர் கயல்விழி வழங்கினார்
தாராபுரம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் மனித வளமேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மலர்மாலைகள், கண்ணாடி வளையல்கள் அணிவித்து மஞ்சள், குங்குமம், இட்டு முறைப்படி நலங்கு எடுத்து அவர்களுக்கு ஆறு வகையான கலவை சாதங்களை வழங்கினார். இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட மாவட்ட அலுவலர் ரஞ்சிதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனஜா, தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story