ராமநாதபுரம்கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பூலாபத்தி கிராமத்தில் உள்ள ஶ்ரீ சப்பாணிகருப்பசாமி, அங்காள பரமேஸ்வரி கோவில் மாசிக் களரியை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சிறிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 20 ஜோடி மாடுகளும் என 32 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன மாட்டுவண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் தங்களது காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது மாட்டுவண்டி பந்தயத்தை பொதுமக்கள் ஏராளமானோர் சாலையின் இருபுறத்திலும் கண்டு ரசித்தனர்.
Next Story

