வரத்து அதிகரிப்பு முள்ளங்கி விலை சரிவு

வரத்து அதிகரிப்பு முள்ளங்கி விலை சரிவு
X
வரத்து அதிகரிப்பு முள்ளங்கி விலை சரிவு
தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வந்து மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முள்ளங்கி அதிகளவு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை குறைந்து 15 கிலோ எடை கொண்ட கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முள்ளங்கி விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டதன் காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள் ஏராளமானார் மகிழ்ச்சியுடன் முள்ளங்கியை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.
Next Story