சனாதன உபதேசங்கள் நூல் வெளியிட்ட ஆளுநர்

X
திருநெல்வேலி மாவட்டம் செங்குளத்தில் அகில உலக அய்யாபதிகள் கூட்டமைப்பு சார்பில் அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் என்ற நூலை தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியிட்டார். இதில் அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

