மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

X
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து,தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் அருகே திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த சிறிய ரக சுமை ஏற்றிச் செல்லும் வாகனம் மோதியது. இதற்கு பின்னால் வந்த லாரி சிறிய ரக சுமையை ஏற்றி செல்லும் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மதுராந்தகம் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

