புதிய தார் சாலை அமைக்க எம்எல்ஏ பூஜை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், பாகல் அள்ளி ஊராட்சி குடுப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையுமாக குண்டும்-குழியு இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகி வந்த நிலையில் எனவே, சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நபார்டு திட்டத்தின் கீழ் 1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று பிப்ரவரி 28, சாலை அமைக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் தர்மபுரி வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ பங்கேற்று,அ1 பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பாமக மாவட்ட துணை செயலாளர் காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story





