மண்டைக்காடு அருகே பைக் மோதி தொழிலாளி காயம்

X
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டலின் விக்டர் (50). இவர் கடைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார். நேற்று இவர் பைக்கில் மண்டைக்காட்டில் இருந்து உடையார் விளை நோக்கி சென்று கொண்டிருந்தார். பருத்திவிளை என்ற பகுதியில் செல்லும் போது பின்னால் முளகுமூடு பகுதியை சேர்ந்த விஜின் என்பவர் ஓட்டி சென்ற பைக் ஆன்டலின் விக்டர் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஆன்டலின் விக்டரை அப்பகுதியினர் மீட்டு, உடையார் விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் விஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

