கிராவல் கடத்தல் , லாரி பறிமுதல்

கிராவல் கடத்தல் , லாரி பறிமுதல்
X
பறிமுதல்
திருக்கோவிலுாரில் ஆற்று மணல், கிராவல் கொள்ளை தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனரக உதவி புவியியலாளர் மஞ்சுநாத் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, டி.கே மண்டபம் அருகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லாரியை பிடித்து விசாரித்த போது, அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவது தெரிந்தது. லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் அங்கிருந்து தப்பினார். இது குறித்த புகாரில், சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் தொட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோவிந்தராஜன் மகன் அருண்குமார், 30; லாரி உரிமையாளர் டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த வெண்ணிலவன் மனைவி சத்தியபிரியா, 24; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story