கோயில் வளாகத்தில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

X
கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் பழநி முருகன் கோயிலின் உப கோயில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பூம்பாறை , மேல்மலை கிராம தி.மு.க.,வினர் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் பொங்கல், லட்டு வழங்க ஏற்பாடு செய்தனர். கோயில் வளாகச் சுவற்றில் போஸ்டரை ஒட்டினர். இதையறிந்த ஊழியர்கள் போஸ்டரை அப்புறப்படுத்தினர்.இதை தொடர்ந்து தி.மு.க..வினர் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். ஊழியர்கள் ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க சம்பந்தப்பட்டவர்களே போஸ்டரை அகற்றினர். கோயில் கண்காணிப்பாளர் அண்ணாதுரை கூறுகையில்,'' கோயில் சுவற்றில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் போஸ்டர் ஒட்டப்பட்டது. உடனே ஊழியர்கள் அகற்றிவிட்டனர். ஒட்டிய தி.மு.க.,வினரை எச்சரித்து அனுப்பினோம்,'' என்றார்.
Next Story

