வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி

X
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த பசுபதிகுமார்(27)தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நோக்கி ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். வேன் வேடசந்தூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் வந்த பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பசுபதிக்குமாரின் தாயார் பர்வதம் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.
Next Story

