மாணவனை கடித்த விஷப்பூச்சி!
ஆலங்குடி அருகே சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மகன் ஆகாஷ் (வயது 11). இவர், சேந்தன்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகி றார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு ஆகாஷ் சென்றுள்ளார். அப்போது விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் யாரிடமும் கூறாமல் நேற்று பள்ளிக்கு வந் துள்ளார். அப்போது அவர் சோர்வாக இருந்ததை பார்த்த ஆசிரியர்கள் அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



