மணமேல்குடியில் சமுதாய வளைகாப்பு விழா!

X
மணமேல்குடி தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மணமேல் குடி முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் பரணி கார்த்திகே யன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் வசந்தி முன் னிலை வகித்தார். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட கர்ப் பிணிகளுக்கு மாலை அணிவித்து, சந்தனம் பூசி, வளை யல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறை மற்றும் உணவு முறை குறித்து கர்ப்பிணிகளுக்கு எடுத்து ரைக்கப்பட்டது.
Next Story

