நாத்துப்பட்டியில் திருவிளக்கு பூஜை

X
பொன்னமராவதி அருகே உள்ள நாத்துப்பட்டி கரகாட்டம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவுபெற்றதையடுத்து வருடா பிஷேக விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தி னர். சிவாச்சாரியார் விக்னேஷ் தலைமையில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

