மாரத்தான் போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அருகில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தை காப்போம் மாரத்தான் போட்டி ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. தருமபுரி அரசு அறிவியல் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சதீஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செந்தில் நகர், இலக்கியம்பட்டி, நெசவாளர் காலனி வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது
Next Story