நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதல்

X

வில்லுக்குறி
குமரி மாவட்டம் இரணியல் அருகே கருஞ்சான்கோடு, தோப்பு விளை என்ற பகுதியை சேர்ந்தவர் செல்லத்தாய் ( 75 ) . இவர் இன்று வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் கட்டணம் செலுத்திவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் ஓன்று எதிர்பாராத விதமாக செல்லத்தாய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (28)என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story