வேதாரண்யத்தில் கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீரை

வடிய வைத்த நெடுஞ்சாலை துறை
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில், கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்தது. இந்த மழையால்,வேதாரண்யம் - நாகை நெடுஞ்சாலையில், தேத்தாகுடி தெற்கு ஓம்சக்தி கோவில் அருகே சாலையில் தண்ணீர் தேங்கியது, இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். உடனடியாக, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நாகராஜன் அறிவுரையின்படி, உதவிக் கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் மதன் ஆகியோர் தண்ணீர் தேங்கிய இடத்திற்கு விரைந்து சென்று, ஜேசிபி இயந்திரம் மற்றும் சாலை பணியாளர்கள் மூலம் உடனடியாக சாலையின் ஓரத்தில் , தேங்கிய மழை நீரை வெட்டி வடிய வைத்தனர். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தண்ணீர் தேங்கி இடையூறு ஏற்படாமல் இருக்க, சாலைகளில் தேங்கிய மழை நீரை உடனடியாக வடிய வைத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சாலை பணியாளர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், சாலையில் அங்கங்கே தேங்கிய மழை நீரை அகற்றும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது எனவும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலைகளில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு வடிய வைக்கபட்டுள்ளது என வேதாரண்யம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story