கோவில்பத்து புதுக்கடையில் மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து

கோவில்பத்து புதுக்கடையில் மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து
X
தலைஞாயிறு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், கோவில்பத்து புதுக்கடையில் மத்திய பாஜக அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களையும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அநாகரிக மானவர்கள் என இழிவாக பேசியதை வன்மையாக கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தலைஞாயிறு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் திவாஸ்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கோவில்பத்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈழன் ரமணி, திமுக கிளை கழக செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கோபி பிரித்திவிராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story