வேதாரண்யத்தில் பெய்த திடீர் கோடை மழையால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக, திடீரென்று பெய்த கோடை கனமழையால், உப்பு பாத்திகளில், மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேரும் சகதியுமாக மாறி உள்ளது. உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பை, மழை நீரில் கரைந்து கரைந்து விடமால் பாதுகாக்க, தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால், உப்பு பாத்திகள் பாதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த திடீர் கோடை மழையால், உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story