பல்வேறு கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா:- மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியினர் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியினர் 100 பேர் புதன்கிழமை அதிமுகவில் இணைந்தனர். அதிமுக மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து திமுக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் புதிதாக இளைஞர்களும் என 100 பேர்; அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் தொகுதி எம்எல்ஏமான பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் கட்சி துண்டு அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story