போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி போதைப்பொருள் ஒழிப்பு, போதைப்பொருளுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள், மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம், மற்றும் குழந்கைள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், குழந்தைகள் எதிரான வன்முறை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி
இன்று 12.03.2025 -ம் தேதி பங்கேற்பாளர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு. ராமராஜ், மற்றும் உதவி முதல்வர் திரு. ஸ்ரீரங்கன், திருமதி. ராசாத்தி (வட்டார வளமைய பயிற்றுநர் வேப்பூர் ஒன்றியம்) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் Dr.திருமதி.வனிதா மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் திருமதி.தென்றல், மற்றும் மீரா ஃபவுண்டேசன் நிறுவனர் திரு.ராஜா முகமது,
ஆகியோர்கள் வேப்பூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் 70-ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம், மற்றும் குழந்கைள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், குழந்தைகள் எதிரான வன்முறை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மற்றும் பயிற்சி நடைப்பெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி போதைப்பொருள் ஒழிப்பு, போதைப்பொருளுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள், மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்றும் ஆகியவை ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581 பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 கிரைம் உதவி எண்கள் 1930
Next Story