"தமிழ்நாடு போராடும் ; தமிழ்நாடு வெல்லும்" கண்டன பொதுக்கூட்டம் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்.பி, சென்னை மதிவாணன், திப்பம்பட்டி ஆறுச்சாமி சிறப்புரை

X

ஒரு இனத்திற்கு அடையாளம் மொழி தான். மொழி இருந்தால் தான் இனத்தை நாம் அடையாளம் காண முடியும்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் நம்மை இரண்டாம் தர மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பை மேற்கொள்ள நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் கண்டன பொதுக்கூட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி காளப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.கூட்டத்தில் சேந்தமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார் சேந்தமங்கலம் பேரூர் கழக செயலாளர் என் தனபாலன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி, நாமக்கல் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் கழக செய்தி தொடர்பாளர் சென்னை மதிவாணன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பேசுகையில்....., நமக்கு தாய்மொழி தமிழ் போதும். ஏற்கனவே ஒன்றிய அரசாங்கம் இந்தி திணிப்பை செய்த போது அப்பொழுது பேரறிஞர் அண்ணா அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது, எந்த காரணத்தை கொண்டும் இந்தியை திணிக்க மாட்டோம் இந்தி பேசாத மக்கள் விரும்புவரை ஆங்கிலமும் அவர்களுடைய தாய்மொழி மண்டல மொழியின் பார்வையில் ரீஜனல் லாங்குவேஜ் தொடரும் என்று நேரு நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார். விரும்புவர்கள் படிக்கட்டும் என்றார். ஆனால் தற்போதுள்ள மோடி அரசு கட்டாயம் இந்தி படித்தால் தான் தமிழ்நாட்டிற்கு பணம் தருவேன் என கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறார். இன்னைக்கும் சென்னையில தி.நகர்ல இந்தி பிரச்சார சபா இருக்குது அதில் விரும்பியவர்கள் ஹிந்தி படிக்கலாம். தேர்வு எழுதலாம். நாம் அதற்கெல்லாம் எதிர்பவர்ப்பவர்கள் கிடையாது. தாய்மொழி தமிழை மத்திய அரசாங்கத்துடைய பாடத்திட்டத்தில் படிக்கணும் அதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. ஒரு மொழியை அழித்துவிட்டு இன்னொரு மொழியை கொண்டுவரக் கூடாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி, குஜராத் மாநிலத்தில் குஜராத்தி மொழிகள் அழிக்கப்பட்டு இந்தி தான் அதிக அளவில் பழக்கத்தில் உள்ளது. அந்த நிலை நம் தமிழ்நாட்டிற்கு தமிழ் இனத்திற்கு வரக்கூடாது.உத்தரப்பிரதேஷ் மாநில முதலமைச்சர் தமிழ் இனத்தை அழிக்கணும்னா தமிழ்மொழி அழிச்சா போதும் எனக்கூறி வருகிறார். ஒரு இனத்திற்கு அடையாளம் மொழி தான். மொழி இருந்தால் தான் இனத்தை நாம் அடையாளம் காண முடியும் அதனாலதான் இந்தியை திணிக்க கூடாது. இந்தி படித்தால் தான் பணம் என்பது சொல்வதை தடுத்து நிறுத்துவதற்காக தான் இந்த கண்டன பொதுக்கூட்டம்.முதலமைச்சர் பதவிக்கு வந்தவுடன் கடந்த தேர்தல் நேரத்தில் சொல்லிய அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது, சேந்தமங்கலம் தொகுதியில் நடுக்கோம்பையில் இருந்து குடிநீருக்கு ஆறு கோடி ரூபாய் மதிப்பில் தனி பைப் லைன், சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு ஆறு கோடிக்கு .தனி குடிநீர் பைப் லைன், மகளிர் இலவச பஸ் பயணம், நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்து மீண்டும் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன், விவசாயிகளுக்கு கடன், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம், காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு ஏழை, எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மக்கள், அவர்களுடைய குழந்தைகள் பசியோட பள்ளிக்கூடத்திற்கு போகக்கூடாது என்று இந்த இந்திய நாடே போற்றுகின்ற மகத்தான திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.கடந்த ஆட்சியில் 10 வருடமா அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கொடநாடு கொலை, கொள்ளை நடந்ததை நீங்க எல்லாம் மறந்திருக்க மாட்டீங்க. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் இருக்கக்கூடிய மர்மம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 நாளைக்கு முன்னாடி எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து இருக்கிறது. கொட நாட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை / ஜெயலலிதா டிரைவர் மர்மமான முறையில் கொலை ஜெயலலிதாவுடைய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சயன் மற்றும் அவரது குழந்தை நீலி ஆகியோர் ஆத்தூர் பக்கத்தில் ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்கள். ஐந்து பேரை கொலை செய்த கொலைகார பாவிகள் மீண்டும் இந்த தமிழ்நாட்டை ஆளலாம்,, மீண்டும் கொள்ளை அடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் யாரும் ஏமாந்தவர்கள் கிடையாது. இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த தமிழ் இனத்திற்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பாடுபடுகின்ற ஒரே முதலமைச்சர் நம்முடைய தளபதி முக ஸ்டாலின் தான். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க. கட்டாயம் நம்முடைய இலக்கு 200-க்கும் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். மீண்டும் முதலமைச்சராக தளபதி மு.க.ஸ்டாலின் அரியணையில் அமர்வது யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்.பி பேசினார்.இக்கூட்டத்தில் துணை செயலாளர் ராணி பெரியண்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பி. இராமசுவாமி, பாலசுப்பிரமணியம், செந்தில்முருகன், நவலடி, பழனிவேல், பேரூர் கழக செயலாளர்கள் அன்பழகன், முருகேசன், செல்வராஜ், பழனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் காளியப்பன் விமலா சிவக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இறுதியாக சேந்தமங்கலம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.
Next Story