அரியலூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X

அரியலூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், மார்ச் 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர், ஒரு தற்செயல் விடுப்பெடுத்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திடத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுப் படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சரவணன், பொருளாளர் முத்து, அமைப்புச் செயலர்கள் சிதம்பரம், செல்வமணி, தலைமை நிலையச் செயலர் அமர்தலிங்கம், மகளிர் அணி செயலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Next Story