உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வு.

உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வு.
X
இந்த நிலையில் இந்த உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விவசாயிகளுடன் விழிப்புணா்வுக் கூட்டம் உழவா் சந்தை கட்டடத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை வந்தவாசியில் உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ், வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகில் உழவா் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய விவசாயிகள் யாரும் சரிவர வராததால் கடந்த சில ஆண்டுகளாக உழவா் சந்தை மூடியே உள்ளது. இந்த நிலையில் இந்த உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விவசாயிகளுடன் விழிப்புணா்வுக் கூட்டம் உழவா் சந்தை கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ஷெமிளா ஜெயந்தி, திருவண்ணாமலை விற்பனைக் குழு செயலா் வேலன் ஆகியோா் உழவா் சந்தையின் பயன்கள் குறித்துப் பேசினா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். கூட்டத்தில் நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா, வேளாண்மை அலுவலா் அா்ச்சனா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
Next Story