திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
X
திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது
அரியலூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம், திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, அக்கட்சியின் கிளை நிர்வாகி கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம் கலந்து கொண்டு, கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, கிளைச் செயலராக கல்யாணசுந்தரம், துணைச் செயலராக சங்கர், பொருளாளராக மதி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில்,  திருமானூரில் மார்ச் 22}இல் நடைபெற்ற கட்சியின் ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்துவதும், மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story