வெம்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை திட்ட இயக்குநா் ஆய்வு.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை திட்ட இயக்குநா் ஆய்வு.
X
22 இடங்களில் சுமாா் ரூ.480.18 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.480.18 லட்சத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை திட்ட இயக்குநா் மணி ஆய்வு செய்தாா். வெம்பாக்கம் ஒன்றியம், அழிஞ்சல்பட்டு ஊராட்சியில் கணினி வகுப்பறை, அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், கலைஞரின் கனவு இல்லம், மாமண்டூா் ஊராட்சியில் கீழ்நாய்க்கன்பாளையம் - ஏழாச்சேரி செல்லும் சாலை, தூசி ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளியில் சமையல்கூடம், கழிவுநீா்க் கால்வாய், கலைஞரின் கனவு இல்லம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பல்லாவரம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என 22 இடங்களில் சுமாா் ரூ.480.18 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கவும், தரமாக மேற்கொள்ளவும் அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மயில்வாகனன், குப்புசாமி, ஒன்றியப் பொறியாளா்கள் அன்பு, வேளாங்கண்ணி, ரவி மலா்வண்ணன், உதவி செயற்பொறியாளா் சபாநாயகம் மற்றும் பணி மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.
Next Story