ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
X
திண்டுக்கல்லில் இரவு ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் ஒரு துரும்பு கூட அருகில் வராது இதுதான் திமுகவின் ஆட்சி - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக, ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக கழக துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கூறியதாவது :- பீகாரில் நித்திஷ் குமார், லல்லு பிரசாத் இணைந்து ஆட்சியை அமைத்து விட்டால் பாஜக மைனாரிட்டியாகவும் இந்தியா கூட்டணி மெஜாரிட்டியாகவும் வந்து விடுவார்கள். திண்டுக்கல்லில் இரவு ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் ஒரு துரும்பு கூட அருகில் வராது இதுதான் திமுகவின் ஆட்சி. தற்போது அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள்ளது. தமிழக கிராமப்புறங்களில் ஹிந்தி என்றால் என்ன என்று கேட்பார்கள். எங்களுக்கு தாய் மொழி தமிழ் அதுதான் ஆட்சி மொழியாக வரவேண்டும் அதுதான் எங்கள் லட்சியம், கொள்கை என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். மும்மொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மாநிலங்களுக்காகவும் சேர்த்து நமது முதலமைச்சர் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார்.இந்தியாவில் எந்த மாநிலமும் போராட முன் வரவில்லை என்றாலும் நமது முதலமைச்சர் போராடி வருகிறார். தமிழக முதல்வர் இந்தியாவில் இருக்கக்கூடிய பாசிச ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொள்ளை புறமாக வந்து ஒரே மொழி, ஒரே ஆட்சி கொண்டுவர வேண்டும் என நினைக்கின்றனர். அது எப்பொழுதும் நடக்கவே நடக்காது. பலமொழிகள், பல சமூக மக்கள் இருக்கும் இந்தியாவில் இது முடிவே முடியாது ஒரே இந்தியா என்று எப்படி அறிவிக்க முடியும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரைக் கொடுத்து சுதந்திரம் பெற்று கொடுத்த சமூகம் சிறுபான்மை சமூகம் என்பதை மறந்து விடக்கூடாது. சிறுபான்மை மக்களை காப்பாற்றியது என்ற மகுடம் திமுகவுக்கு தான் உள்ளது. ஜவர்கலால் நேரு ஹிந்தி விரும்புகிற வரை திணிக்க மாட்டோம் என பாராளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துள்ளார். தமிழ் மொழியை காப்பதற்காக தமிழ்நாட்டில் 8 கோடி மக்களும் எங்கள் தமிழக முதல்வர் பின்னால் தான் வருவார்கள். அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. 3வது மொழியாக சமஸ்கிருதமோ, ஹிந்தியோ படிக்க முடியவே முடியாது. புதிய கல்விக் கொள்கைக்கு நமது முதலமைச்சர் சம்மதம் தெரிவிக்கிறோம் என கூறவில்லை. நாம் எப்போது அவ்வாறு கூறினோம். புதிய கல்விக் கொள்கை ஏற்க முடியாது. என்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து நிதியை மறுத்து வருகிறார்கள். மத்திய அரசு 2000 கோடி நிதியை நிறுத்தியுள்ளனர். கூட்டாட்சி தத்துவம் உள்ள நாட்டில் கல்வியில் மாநிலத்திற்கும் உரிமை உள்ளது. நிதியை பொறுத்தவரையில் இன்று இல்லை என்றாலும் நாளை கொடுத்து தான் ஆக வேண்டும். இல்லை என்றால் இந்தியாவில் ஆட்சி தொடர முடியாது. நவோதயா பள்ளிகள் ஹிந்தியை திணிப்பதற்காக கொண்டு வந்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எத்தனை ஆயிரம் கோடி கொடுத்தாலும் நவோதயா பள்ளி தொடங்க முடியாது என கூறினார். அதேபோல் தற்போது புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முதலமைச்சர் கூறி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மொழிக் கொள்கையை எப்படி கடைப்பிடித்தாரோ அதேபோல் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு கட்டத்திற்கு மேலே வீரமிக்க முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். பாராளுமன்றத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டில் பாராளுமன்றங்கள் குறைக்கப்பட வேண்டும். இந்தியாவில் மூன்று 8 போட வேண்டும் என நினைக்கின்றனர். பாசிசம் சர்வாதிகாரத்திற்கு எதிர்த்து போராடுகின்ற வீரம் தமிழ்நாட்டிற்கு தான் உள்ளது. தமிழக முதல்வர் 365 முதல் 3000 நாட்களாக இருந்தாலும் போராடுவார். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் போராடுவார். நீட் தேர்வு வருவதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி. நீட் தேர்வை தமிழ்நாட்டில் விட்டு தூக்கி எறிவோம் அதற்கான வெகு காலம் இல்லை என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறினார். முன்னதாக ஒன்றிய அரசை கண்டித்து தலைமைக் கழக பேச்சாளர் வயலூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் நிகழ்வில் திண்டுக்கல் மாநகரச் செயலாளர் ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதிஜோதிபிரகாஷ் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர், பகுதிச் செயலாளர்கள் கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story