ஹார்விபட்டியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்.

மதுரை அருகே திமுகவின் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருப்பரங்குன்றம் தெற்கு பகுதிக்கு உட்பட்ட 96- வது வார்டு ஹார்விபட்டியில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து நேற்று (மார்ச்.12) இரவு நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்களான கழகக் கொள்கை பரப்பு குழு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் சிவமுத்துவளவன் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். இக்கண்டனக் கூட்டத்தில் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் தெற்கு பகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Next Story