பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற ஆலோசனை

பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற ஆலோசனை
X
பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற்றம் அடைய எஸ் ஆர் எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் ஆலோசனை.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எஸ் ஆர் எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பெண் தொழில் முனைவோர் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுவினர்களுக்கு சுய தொழில் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சிறப்பு விருந்தினராக வடமதுரை பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா பங்கேற்று கருத்துரை ஆற்றினார். அங்கன்வாடி பணியாளர் தமிழரசி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பெண் தொழில் முனைவோர் தாங்கள் எவ்வாறு செயல்பட்டு வெற்றி அடைந்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுய தொழில் தொடங்க என்னென்ன திட்டங்கள், அரசின் சலுகைகள் உள்ளது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவரிடமும் கேள்விகள் கேட்டு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Next Story