ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்

X

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலமுறை ஓய்வூதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்திட அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமையில் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story