காடுவெட்டி வழியாக புதிய நகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்து துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைப்பு.

ஜெயங்கொண்டத்திலிருந்து காடுவெட்டி புதிய நகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்து துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அரியலூர், மார்ச்.13- ஜெயங்கொண்டத்திலிருந்து காடுவெட்டி வழியாக புதிய நகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்து துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டத்தில் புதிய நகர பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்* ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய நகர பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டத்திலிருந்து காடுவெட்டி, அணைக்கரை, சுத்தமல்லி, ஆர்.எஸ். மாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மகளிர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டது . இதில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story