தாய், மகள் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட ஏஎஸ்பிக்கு எஸ்.பி., பாராட்டு!

X

எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கடந்த 03.03.2025 அன்று எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலநம்பிபுரம் பகுதியில் தாய் மகள் ஆகிய இருவரையும் கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தப்பிஓடி தலைமறைவாயிருந்த எதிரிகளை தொழில்நுட்ப ரீதியாகவும், இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமலும் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு விரைந்து கைது செய்து தங்க நகைகளை மீட்டு துரிதமாக செயல்பட்ட தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் விளாத்திகுளம் அசோகன், கோவில்பட்டி ஜெகநாதன், மணியாச்சி குரு வெங்கட்ராஜ், ஸ்ரீவைகுண்டம் ராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர்கள் ஆனந்தி கலாலெட்சுமி, தனிவிரல் ரேகை பிரிவு ஆய்வாளர் மற்றும் 20 காவல் ஆய்வாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கும், கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 காவல்துறையினருக்கும் என மொத்தம் 89 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Next Story