அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று - அமைச்சர் சேகர் பாபு

பாரதிய ஜனதாவிடம் கட்சியை முழுமையாக அடமானம் வைத்திருக்கின்ற ஜெயக்குமார் போன்ற அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காட்டம்
பாரதிய ஜனதாவிடம் கட்சியை முழுமையாக அடமானம் வைத்திருக்கின்ற ஜெயக்குமார் போன்ற அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காட்டம் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு ஐசிஎப்ஃ காலனியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அன்னம் தரும் அமுத கரங்கள் திட்டத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கி,நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுகவினருக்கு நற்சான்றிதழை தான் அளித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்த செய்தியாளர் கேள்விக்கு, மத்திய அரசுக்கு லவானி பாடுவது நோக்கமாகக் கொண்டிருக்கின்ற பாரதிய ஜனதாவிடம் கட்சியை முழுமையாக அடமானம் வைத்திருக்கின்ற ஜெயக்குமார் போன்ற அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று. மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்ற எங்களுடைய நடவடிக்கையை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். இது போன்ற லாவணி பாடுபவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் நிலைமையில் நாங்கள் இல்லை என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் நகர மன்ற குழு தலைவர் மூர்த்தி பகுதி செயலாளர் டி எஸ் பி ராஜகோபால் எம் டி ஆர் நாகராஜ் 86 வது வார்டு கவுன்சிலர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story