பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர்.

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர்.
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு சட்டம். குழந்தைகளுக்கான உதவி எண் 1098. இளம் வயது கர்ப்பம். பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம். மகளிர் உதவி எண் 181. குழந்தை பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் போன்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ஊர்தியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் என்று கொடியசைத்து தூங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்தி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று 38 நாட்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story