வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளியில் உடல் அழுகி எலும்பு கூடாக கிடந்த பெண்

சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை - போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகே துர்நாற்றம் விசுவதாக ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள வாய்க்காலின் புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எலும்பு கூடாக அழுகிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், சடலம் அழுகி எழும்பு கூடாக கிடந்ததால் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முடியாததால், சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எலும்பு கூடாக கிடந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சடலத்தின் அருகே பெண்ணின் செருப்பும், கழுத்தில் செப மாலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story